பீஜம் ஷேத்திரம் 2
பீஜம்,ஷேத்திரம் தொடர்ச்சி
---------- -------------- ---------------
பீஜகணிதம்
----------------------
ஒரு ஆணின் ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன், குரு ஆகிய மூன்று கிரகங்களின் பாகை,கலை,விகலை ஆகியவைகளைக் கூட்டி,360 டிகிரிக்கு மேல் வந்தால்,360ஆல் வகுத்து மீதம் வரும் பாகை,கலை,விகலை
எந்த ராசியில் வருகிறதோ,அது பீஜ ராசி ஆகும்
பீஜராசியானது ஆண்களுக்கு ஒற்றைப் படை ராசியாகவும்(அதாவது ஆண்ராசியாக)
அதேமாதிரி நவாம்சத்திலும் ஒற்றைப் படை ராசியாகவும் வரவேண்டும்.மேலும் இந்த ராசியை சுபகிரகங்கள் பார்தாலும், ஆண் கிரகங்கள் பார்த்தாலும், இக்கிரகங்கள் பீஜ ராசியில் இருந்தாலும்,அந்த ஆணின் சுக்கிலம் அதிக வீரியமிக்கது எனவும் அந்த சுக்கிலத்தில் அதிக உயிர்ப்பு சக்தி உள்ளது எனவும் அறியலாம்.
இதே போல ஒரு பெண்ணின் ஜாதகத்தில், சந்திரன்,செவ்வாய்,குரு ஆகிய மூன்று கிரகங்களின் பாகை,கலை, விகலை ஆகியவைகளைக் கூட்டி 360ஆல் வகுத்து மீதி உள்ள பாகை,கலை,விகலைகளுக்கு எந்த ராசி வருகிறதோ,அது ஷேத்திர ராசி ஆகும்
பெண்ணின் ஜாதகத்தில் ஷேத்திரமானது இரட்டைப் படை ராசியாக
அதாவது,பெண் ராசியாக வரவேண்டும் அதனை சுபக் கிரகங்கள் பார்த்தாலும்,அந்த பெண்ணின் கர்ப்ப பை அதிக வலிமை மிக்கது என அறியலாம்.
பீஜ,ஷேத்திர ராசிகளை, மலட்டு கிரகங்களாகிய புதனும்,சனியும் பார்க்கக் கூடாது,அதே போல் பீஜ,ஷேத்திர ராசிகளுக்கு 5ல் மலட்டு கிரகங்கள் அமரக்கூடாது.
பீஜம்,ஷேத்திரம் வலுவிழந்து போனால் அந்த தம்பதிகளுக்கு குழந்தை உற்பத்தி ஆகாது, ஒன்று வலுவாகவும்,ஒன்று வலுவில்லாமலும் இருந்தால் தாமதமாக குழந்தை உற்பத்தி ஆகும்
ஒரு உதாரணம் ஆண்
------------------------- ----------
பாகை. கலை
------------- ----------
சூரியன் ------- 66. 58
குரு. --------- 277. 26
சுக்கிரன்--------- 84. 30
---------------------------
மொத்தம். 428. 54
_360. 00
--------------------------
மீதி. 68. 54
--------------------------
இந்த 68 பாகை 54 கலை என்பது மூன்றாவது ராசியான மிதுனத்தில் வரும், அதாவது மிதுனத்தில் 8 பாகை 54 கலைகளில் அமைந்துள்ளது,அதாவது திருவாதிரை நட்சத்திரம் முதல் பாதத்தில் உள்ளது. இது நவாம்சத்தில் தனுசு ராசியில் வரும். இதன்படி பீஜம்,ராசியிலும்,நவாம்சத்-
திலும் ஆண் ராசியில் வரும்.
நன்றி
SUPER!!!
பதிலளிநீக்கு