திருமணப் பொருத்தம் 4

திருமணப்பொருத்தம் 4
       ----------------------
   ஐந்தாவது பொருத்தமாக ரஜ்ஜு
பொருத்தம்.இதை சரடு அல்லது தாலிப்
பொருத்தம் என்பார்கள்.
   நட்சத்திரப் பொருத்தத்தில் இது மிக
முக்கியமானது ஆகும்.வது,வரன் இருவரும்
ஒரே ரஜ்ஜுவில் வந்தால் திருமணம் செய்ய
கூடாது.இதற்கு விதி விலக்கு உண்டு இந்த விதி விலக்கை பெறும்பாலான
ஜோதிடர்கள் அனுசரிப்பதில்லை
   ஜோதிட ஆர்வலர்களுக்காக சில
விதிகளை இங்கே சொல்ல வேண்டியது
அவசியமாகிறது.அது,ரஜ்ஜுவில் இரண்டு
பிரிவுகள் உள்ளது,அது"ஆரோகணம்"
அவரோகணம் ஆகும்.ஆரோகணம் என்பது ஏறுமுகம்,அவரோகணம் என்பது
இறங்குமுகமாகும்.இதைப் புரிந்துகொள்ள
கிரகங்களின் நட்சத்திரம் தெரிய வேண்டும்.கிரகங்களின் தசாவரிசை அடிப்படையில் கிரகங்களும் அதன் நட்சத்திரங்களும் கீழே உள்ளபடி அமையும்.
1)கேது-அசுவனி,மகம்,மூலம்

2)சுக்கிரன்-பரணி,பூரம்,பூராடம்

3)சூரியன்-கார்த்திகை,உத்திரம்,உத்ராடம்

4)சந்திரன்-ரோகிணி,அஸ்தம்,திருவோணம்

5)செவ்வாய்-மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம்

6)ராகு-திருவாதிரை,சுவாதி,சதயம்

7)குரு-புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி

8)சனி-பூசம்,அனுசம்,உத்திரட்டாதி

9)புதன்-ஆயில்யம்,கேட்டை,ரேவதி

   இதில் ஐந்தாவதாக வரும் செவ்வாயின்
நட்சத்திரம் சிரசு(தலை)ரஜ்ஜு எனப்படும்
இதற்கு ஆரோகணம்,அவரோகணம் கிடையாது.அடுத்து புரிந்து கொள்ள எளிமையாக,1ம்,9ம் பாதரஜ்ஜு,இதில் ஒன்று,ஆரோகணம் ஒன்பது அவரோகணம்.
   அடுத்து 2ம்,8ம் தொடைரஜ்ஜு இதில் இரண்டு ஆரோகணம்,எட்டு அவரோகணம்

   அடுத்து 3ம்,7ம் வயிறுரஜ்ஜு இதில் மூன்று ஆரோகணம்,7அவரோகணம்

   அடுத்து 4ம்,6ம் கழுத்துரஜ்ஜு இதில் நான்கு ஆரோகணம்,ஆறு அவரோகணம்

   இதில் வது,வரனின் நட்சத்திரங்கள் ஒரே
ரஜ்ஜுவில் வந்தாலும் ஆரோகணம் அவரோகணமாக வந்தால் திருமணம் செய்யலாம்.இத்துடன் நட்சத்திரப் பொருத்தங்கள் நறைவடைந்தது.ஜாதகப்
பொருத்தங்கள் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.....(தொடரும்)

கருத்துகள்