சந்திரனின் நீச நிலை

சந்திரனின் நீச நிலை
________________________
   சந்திரன் விருச்சிக ராசியில் நீசம் என்பது ஜோதிடம் அறிந்த எல்லோருக்கும் தெரியும். அதேநேரம் விருச்சிகத்தில் முதல் நான்கு பாகைக்குள் தான் நீசம் என்பதை எடுத்துக்கொள்ளாமலோ அல்லது தெரியாமலோ,சந்திரன் விருச்சிகத்தில் உள்ளதா நீசம் தான் என்றும் சந்திரனின் காரகத்துவங்கள் ஜாதகருக்கு கிடைக்காது என பயமுறுத்தி விடுகிறோம்
        அதாவது சந்திரன் விருச்சிகத்தில் முதல் நான்கு பாகைக்குள்தான் நீசம் அதற்கு மேல் உள்ள பாகைகளில் சந்திரன் இருந்தால் நீசம் இல்லை.இதைத் தெரிந்தோ தெரியாமலோ நாம் பலன் சொல்கிறோம் இந்த முதல் நான்கு பாகையில் முதல் மூன்று பாகை அறுபது கலைகள் குருவின் நட்சத்திரமான விசாகம் நான்காம் பாதம் உள்ளது இந்த நட்சத்திர பாதத்தில் சந்திரன் நிற்கும் போது,அம்சத்தில் சந்திரன் கடகத்தில் ஆட்சியாக இருக்கும்.அப்போது நீசபங்க விதிப்படி ஒரு கிரகம் ராசியில் நீசம் பெற்று அம்சத்தில் ஆட்சியோ,உச்சமோ பெற்றிருந்தால் நீசபங்கமாகி விடும் ஆகவே சந்திரன் நீசம் இல்லை.
        அடுத்ததாக நான்கு பாகையில் மீதம் இருப்பது  நாற்பது கலைகள் மட்டுமே,அதாவது அனுசம் ஒன்றாம் பாதத்தில் முதல் நாற்பது கலைகள் இதில் சந்திரன் இருந்தால் நீசமா?... அதுவும் இல்லை.எப்படி என்றால் நீசபங்க விதிகளின்படி நீசம்பெற்ற கிரகம் சந்திர கேந்திரத்தில் இருந்தால் நீச பங்கமாகிவிடும்,சந்திரனுக்கே நீசம் பார்க்கும் நிலையில்,சந்திரன் இருக்கும் இடமே ஒன்னாவது கேந்திரமாவதால்
சந்திரன் நீசபங்கமாகி உள்ளதாக எடுத்துக் கொள்ளலாம் ஆகவே சந்திரனுக்கு முழு நீசம் இல்லை என்பது தெரிகிறது
           ஆகவே சந்திரன் விருச்சிகத்தில் இருந்தால் நீசம் என்று பலன் சொல்லாமல்,மற்ற நிலைகளையும் சீர்தூக்கி பார்த்து பலன் சொல்ல வேண்டியது ஜோதிடர்களான நமது கடமையாகும்
                     -நன்றி-

கருத்துகள்