திருமண பொருத்தம் 1
திருமணப்பொருத்தம் 1
---------------------
திருமணம்"ஆயிரம்காலத்துப்பயிர்"என்பார்கள்.ஒரு ஆணையும்,பெண்ணையும் திருமணம் என்னும் பந்தத்தில் இனைப்பதற்கு திருமணப்பொருத்தம் அவசியம் பார்க்க வேண்டும்.பொருத்தமே பார்க்காமல் திருமணம் செய்வதற்கும் சில முறைகள் உள்ளது.
யாருக்கெல்லாம் பொருத்தம் பார்க்காமல் மணம் செய்யலாமென்றால்
காதல் திருமணம்,நெருங்கிய உறவுகளில்,
கர்பத்தில் இருக்கும்போதே இதுதான் பெண் அல்லது மாப்பிள்ளை என்று பெரியவர்களால் நிச்சயிக்கப்படுவது
தெய்வசந்நிதியில் திருமணத்திற்காக பூக்கட்டி பார்க்கும் போது வெள்ளை பூ கொடுத்தல்,இவர்களுக்கெல்லாம் திருமணப்பொருத்தம் பார்க்க தேவை இல்லை
ஒரு ஆணும்,பெண்ணும் திருமணம் என்னும் பந்தத்தில் இனைந்து நல் ஆரோக்கியத்துடனும்,நீண்ட ஆயுளுடனும்
குழந்தைகள் பெற்று,கணவனும் மனைவியும் ஒத்த கருத்துடன் இனைபிரியாமல் வாழவேண்டும்.இப்படி வாழ்வார்களா என்று தெரிந்து கொள்ள திருமணப்பொருத்தம் பார்க்க வேண்டும்
பொருத்தத்தில் ஒன்று"நட்சத்திரப்பொருத்தம்"இரண்டு "ஜாதகப்பொருத்தம்" நட்சத்திரப்பொருத்தத்தை விட ஜாதகப் பொருத்தத்துக்கே முக்கியத்துவம் தரவேண்டும்.அடுத்தபதிவில் நட்சத்திர
பொருத்தத்தைப் பற்றி பார்க்கலாம்
இந்த பதிவுகளில் நான்,எப்படி பொருத்தம் பார்த்து ஜாதகங்களை சேர்பேன் என்பதைப்பற்றி மட்டுமே சொல்லப்போகிறேன் சில விசயங்கள் உங்களுக்கு ஒத்துப்போகலாம் சில விசயங்கள் முரண்பாடாகத் தெரியலாம்
எது எப்படி இருப்பினும் ஏற்றதை எடுத்துக்
கொள்ளுங்கள்.....(தொடரும்)
கருத்துகள்
கருத்துரையிடுக