திருமண பொருத்தம் 2

திருமணப்பொருத்தம் 2
    ---------------------
          நட்சத்திர ரீதியாக 20 விதமான பொருத்தங்களைப் பார்த்துள்ளனர் நமது
முன்னோர்கள் அது இப்பொது குறைந்து
தசப்பொருத்தத்தில் வந்து நிற்கிறது.
(தசம்ம்=பத்து தெரியாதவர்களுக்காக)
இந்த பத்துவிதமான பொருத்தங்கள் யாதெனில்,தினம்,கணம்,மகேந்திரம் ஸ்திரீதீர்க்கம்,யோனி,ராசி,ராசிஅதிபதி வசியம்,ரஜ்ஜு,வேதை என்பதாகும்
             இந்த பத்தில் முக்கியமாக ஐந்து
பொருத்தங்கள் பொருந்தி வந்தாலே ஜாதகத்தை இனைக்கலாம் அந்த ஐந்து
பொருத்தங்கள்,தினம்,கணம்,யோனி,ராசி
ரஜ்ஜு என்பதாகும்.நான் நட்சத்திர பொருத்தத்தில் இந்த ஐந்தும்,ஜாதகப்
பொருத்தமும் இருந்தால் வது,வரனை
இனைத்து விடுவேன்
                  இதில் முதலாவதாக உள்ள தினப்பொருத்தம் என்பது தாராபலனை
அடிப்படையாக கொண்டது,பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரம்
வரை எண்ணும் போது கூட்டுத்தொகை 2,4,6,8,9 ஆக வந்தால் இனைக்கலாம்
                 கணப்பொருத்தம் என்பது குணாதிசயங்களை அடிப்படையாக கொண்டது 27 நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குணம் இருக்கும்
அது தேவ,மனுஷ,ராட்சஷம் என்னும் குணங்களாகும்.இதில் ஒரே குணமுடையவர்களை இனைக்க வேண்டும்.விதி விலக்காக பெண் தேவகணமானால் ஆண் மனுஷ கணத்தை
இனைக்கலாம்,பெண் மனுஷகணமானால்
ஆண் தேவகணத்தை இனைக்கலாம்
பெண் ராட்ஷசகணமானால் ஆண் ராட்ஷசகணத்தை மட்டுமே இனைக்க
வேண்டும்.மீதிப் பொருத்தங்களை அடுத்த
பதிவில் பார்க்கலாம்....(தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சந்திரனின் நீச நிலை

பீஜம் ஷேத்திரம் 2

திருமணப் பொருத்தம் 4