திருமணப் பொருத்தம் 3

திருமணப்பொருத்தம் 3
----------------------
      முக்கியமான ஐந்து பொருத்தங்களில்
அடுத்து யோனிப்பொருத்தம்
       இது தாம்பத்திய உறவைப்பற்றி குறிப்பதாகும்.27 நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மிருகத்தின் குணம் உண்டு இதில் ஒன்றுக்கு ஒன்று நட்பாக இருந்தால் இனைக்கலாம் மேலும் ஆணுக்கு ஆண்யோனியும்,பெண்ணுக்கு பெண்யோனியுமாக வந்தால் மிக சிறப்பு
அப்படி வராத பட்சத்தில் ஜென்மப்பகை
யோனிகளை இனைக்கக்கூடாது
    ஜென்மப்பகை யோனிகள்
    -------------------------
குதிரைக்கு எருமை

ஆடுக்கு குரங்கு

எலிக்கு பூனை

நாய்க்கு மான் பகை
          மேலும் யானைக்கு சிங்கம்
பசுவுக்கு புலி
பூனைக்கு நாய் பகையாகும்

       அடுத்து ராசிப்பொருத்தத்தைப் பற்றி
பார்க்கலாம்.பெண் ராசியிலிருந்து ஆண்
ராசி 6க்கு மேல் வந்தால் நல்ல பொருத்தமாக எடுத்துக்கொள்ளலாம்
இதில் ஒருவருக்கொருவர் 7வது ராசியாக
வந்தால் மிக சிறப்பு.
       ஒருவரின் ராசி ஒருவருக்கு 6ஆகவோ
8ஆகவோ வந்தால் சஷ்ட்டாஷ்டக தோசமாகும் இதை இனைக்கக்கூடாது
விதிவிலக்காக பெண்ணுக்கு ஆண் ராசியும்
ஆணுக்கு பெண்ராசியுமாக வந்தால் சேர்க்கலாம் (உம்)பெண்ணுக்கு மேசம்
ஆண்ராசி,அதிலிருந்து கன்னி 6வது ராசி
பெண்ராசி இனைக்கலாம்.இதே ஆணுக்கு  மேசமும் பெண்ணுக்கு கன்னியமான வந்தால் இனைக்கக்கூடாது
          ஏழாவது ராசியாக வந்தால் சிறப்பு
என்று பார்த்தோம்.ஏனென்றால் ராசியின்
தூரங்கள் சரி ஒரே அளவாக இருக்கும் பரஸ்பர அன்பும் ஒரே மாதிரி இருக்கும் இதில் இன்னுமொரு விசயம் மேசம் நெருப்பு அதற்கு 7வது ராசியான துலாம் காற்று நெருப்புக்கு காற்று துணை செய்யும்.இப்படி ஒன்றுக்கு ஒன்று 7வது ராசியாக வருவது நெருப்பும் காற்றும்
அல்லது நீர் நிலமுமாக வரும் பஞ்ச பூத
த்த்துவங்களின் அடிப்படையில் ஒன்றுக்கு
ஒன்று ஒத்துப்போகும்.
          ஏழாவது ராசியாக வரும் கடகம்,மகரம் மற்றும் சிம்மம்,கும்பம் ராசிகளை இனைக்கக்கூடாது ஏனென்றால்,சந்திரன்,சனி-சூரியன்,சனி
ஜென்ம பகைக்கிரகங்கள் ஆகும்.
           7வது ராசிக்கு குறைவாக வரும்
ராசிகளை பஞ்ச பூத அடிப்படையில் அல்லது ராசி அதிபதிகளின் அடிப்படையில் ஒன்றுக்கு ஒன்று நட்பாக
வந்தால் இனைக்கலாம்.மீதியை அடுத்த பதிவில் பார்க்கலாம்.....(தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சந்திரனின் நீச நிலை

பீஜம் ஷேத்திரம் 2

திருமணப் பொருத்தம் 4