திருமணப் பொருத்தம் 5
திருமணப்பொருத்தம் 5
-------------------------
ஜாதகப்பொருத்தத்தைப் பற்றி இப்போது
பார்ப்போம்.நட்சத்திரப் பொருத்தங்கள் 10/10 இருந்தாலும் ஜாதகப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்பது பெரும்பாலான
ஜோதிடர்களின் கருத்தாக இருந்தாலும்
எங்கள் ஊர் பக்கம் இன்னும் நட்சத்திர பொருத்தத்துடன் நிறுத்திவிடும் ஜோதிடர்களும் உண்டு
ஜாதகப்பொருத்தத்தில், லக்கன பொருத்தம்,தோஷசாம்யம்,புத்திரபாக்கியம்,ஆயுள்தோஷம்,ஆணுக்கு தொழில் பற்றிய ஆய்வு,ஏக தசா,தசாசந்தி, திருமணம் ஆனபின்பு வரும் தசா பற்றிய ஆய்வு போன்றவற்றை கவனமாக பரிசீலிக்க வேண்டும்.
முதலில் லக்கனப்பொருத்தம் பற்றிப்
பார்ப்போம்.லக்கனம் மற்றும் லக்கனாதிபதிகள் ஒருவருக்கொருவர்
மறையக்கூடாது,இருவரின் லக்கன அதிபதிகள் ஒருவருக்கு ஒருவர் நட்பாக
இருப்பது சிறப்பு.
நடப்பு என்று வரும்போது ஜோதிட ஆர்வலர்களுக்காக,நட்பு,பகை அறியும்
விபரத்தை இங்கே பதிவிடவேண்டியது அவசியமாகிறது.ஒரு கிரகம் மூலத்திரிகோணம் அடையும் ராசியில் இருந்து,2,4,5,8,9,12 ஆகிய ஸ்தானங்களையும்,அதன் அதிபதியையும்
நட்பாக கொள்ளும்.மாறாக 3,6,7,10,11 ஆகிய ராசியையும்,அதன் அதிபதியையும்
பகையாக்க் கொள்ளும்,இரு ஆதிபத்தியங்களில் ஒன்று நட்பாகவும் ஒன்று பகையாகவும் வந்தால் அந்த கிரகம்
சம்மாகும் (எகா)மேசலக்கனத்திற்கு லக்கனாதிபதி செவ்வாய்,செவ்வாயின் மூலத்திரிகோணவீடு மேசம் இதற்கு சுக்கிரன்2,7க்குடையவர் இதில் 2ஆமிடம்
நட்பு,7ஆமிடம் பகை ஆகவே செவ்வாய்க்கு சுக்கிரன் சம்ம்.இவ்வாறாக
பார்த்துக்கொள்ளவும்.....(தொடரும்)
கருத்துகள்
கருத்துரையிடுக