திருமண பொருத்தம் 6
திருமணப்பொருத்தம் 6
-----------------------
திருமணப்பொருத்தத்தில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது தோஷசாம்யமாகும்.இதில் ஆணுக்கும்
பெண்ணுக்கும் தோஷ அளவுகள் சரியாக
அல்லது பெண்ணுக்கு குறைவாக இருக்கலாம்.
தோஷம் கணக்கிடும் போது,லக்கனம் ராசி,சுக்கிரன் இந்த மூன்றில் படியும் கணக்கிட வேண்டும்.லக்கன ரீதியாக உள்ள தோஷத்திற்கு ஒரு மார்க்கும் ராசி
ரீதியான தோஷத்திற்கு அரை மார்க்கும் சுக்கிரன் ரீதியான தோசத்திற்கு கால் மார்க்கும் கொடுத்து கணக்கிட வேண்டும்
ஒருவரின் லக்கனம் மற்றும் ராசி சுக்கிரனின் இருந்து 1,2,7,8,12ல் பாவகிரகங்கள் இருந்தால் அது திருமண
தோஷமாகும்.இரண்டாமிடத்தில் இருந்தால் அது குடும்ப தோஷமாகும் ஏழாம் இடத்தில் இருந்தால் அது களத்திரதோஷமாகும்.எட்டாம் இடத்தில்
இருந்தால் மாங்கல்ய தோஷமாகும்
பனிரெண்டாம் இடத்தில் இருப்பது அயன
சயன தோசமாகும்.
ஒன்றாம் இடத்தில் பாவர்கள் இருக்கும் பொழுது ஜாதகரின் குணாதிசயங்களை
கெடுத்து,ஏழாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தை கெடுக்கும்.
இரண்டாமிடத்தில் பாவர்கள் இருக்கும்
போது குடும்பம் அமைவதைக்கெடுத்து மாங்கல்ய தோஷத்தையும் கொடுக்கும்.
ஏழாம் இடத்தில் இருக்கும்போது களத்திரஸ்தானத்தைக் கெடுத்து ஜாதகரையும் கெடுக்கும்.எட்டாம் இடத்தில் இருக்கும்போது மாங்கல்ய ஸ்தானத்தையும் குடும்ப ஸ்தானத்தையும்
கெடுக்கும்.பனிரெண்டில் இருக்கும்போது
படுக்கை சுகத்தைக்கெடுக்கும்.
மேற்கண்ட இடங்களில் ஆண் பெண் ஜாதகங்களில் பாவர்கள் இருக்கும் பட்சத்தில் அதை தோஷ சாம்யமாக கருதலாம்.
எட்டாம் இடத்தில் பெண்ணுக்கு பாவிகள் இருக்கும்போது,ஆணின் ஜாதகத்தில் ஆயுள் பாவம் ஆராயப்பட்டு
தீர்க்காயுள் ஜாதகத்துடன் அந்த பெண்ணின் ஜாதகத்தை இனைக்க வேண்டும்
அயனசயன ஸ்தானம் பாதிக்கப்படும்
ஆண்,பெண்ணுக்கு தாம்பத்ய சுகம் நீடிப்பது இல்லை.ஒரு ஆணின் ஜாதகத்தில் அவ்வாறு அமையும் பட்சத்தில்
தொழில்ரீதியாகவோ வேறு காரணங்கள்
நிமித்தமாகவோ மனைவியை பிரிந்து இருக்கும் சூழ்நிலைகள் வரும் அப்போது
பெண்ணின் ஜாதகத்திலும் அந்த அமைப்பு இருந்தால் அந்த பிரிவை தாங்கி கொண்டு
நெறி தவறாமல் இருப்பார்கள். இதில் தவறு ஏற்படும் பட்சத்தில் குடும்பத்தில் சிக்கல் வந்துவிடும்.
இனி தோஷ விபரங்களை பார்ப்போம்
1,சூரியன் தோஷம்
2,செவ்வாய் தோஷம்
3, சுக்கிரன் தோஷம்
4, சனி தோஷம்
5,நாகதோஷம்
6, புத்திரதோஷம்
பொதுவாகவே ஒரு ஜாதகத்தில் ஏழாமிடமும்,எட்டாமிடமும் சுத்தமாக இருக்க வேண்டும்.சுத்தம் என்பது சுபரோ
பாவரோ இல்லாமல் இருப்பது.ஏழாம் இடத்தில் எந்த கிரகம் இருந்தாலும் அது திருமணத்தடையை ஏற்ப்படுத்தும் எப்படி என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்....
(தொடரும்)
கருத்துகள்
கருத்துரையிடுக