திருமணப் பொருத்தம் 7

திருமணப்பொருத்தம் 7
    ----------------------

    அனைவருக்கும் வணக்கம் இப்போது சூரியன்,திருமணத்தில் எவ்வாறான தடைகளையும்,வேறு பிரச்சனைகளையும்
தரும் என்று பார்ப்போம்.

    ஏழாம் இடம்,எட்டாமிடங்கள் திருமணத்தையும்,தாம்பத்யஉறவுகளையும்
குறிக்கும் இடமாகும்.ஏழில் சூரியன் இருந்தால் ஜாதகரின் தந்தையால் திருமணம் தடையாகிக் கொண்டே போகும் இந்தமாதிரி அமைப்புள்ள ஜாதகர்
தன்னுடைய தந்தையாரை திருமணம் சம்பந்தமாக எந்த விஷயத்திலும் ஈடுபடுத்த
கூடாது.தாய் அல்லது உறவினர்கள் மூலம்
திருமண ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
   
    தாம்பத்ய உறவைக் குறிக்கும் இடத்தில் சூரியன் இருக்கும் போது அங்கே உஷ்ணத்தை அதிகமாக்கி உறவுகளில் திருப்தி இல்லாத நிலையைப் தருவார் மற்றும் லக்கனம்,இரண்டாமிடத்தை பார்த்து குனக்கேடுகளையும் தருவார் இதனால் தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை இருக்காது.

    எட்டாம் இடம் கர்ப்ப ஸ்தானமாகும் இங்கே சூரியன் இருப்பது,கர்ப்ப பையில் அதீத உஷ்ணத்தினால் கருவை தங்கவிடாது.எனவே திருமண சம்பந்தப்பட்ட ஏழாம் இடத்தில் சூரியன் இருக்கும் போது அது களத்திர தோஷம் எனப்படுகிறது.எட்டாமிடத்தில் உள்ள போது,பெண்களுக்கு மாங்கல்ய தோஷமா
-கவும்,பெண்ணுக்கு கர்ப்பம்
தங்குவதில் பிரச்சினைகளையும் உண்டு பன்னும்.இதற்கு தகுந்த ஜாதகங்களை இனைப்பதே சிறப்பு.

    அடுத்ததாக செவ்வாய் தோஷம். எல்லா
மக்களுக்கும் நன்றாக தெரிந்த தோஷம். எல்லா நூல்களிலும் இந்த தோஷத்திற்கு விதிவிலக்குகள் சொல்லப்பட்டுள்ளது அதன் விளக்கம்,சுருக்கமாக செவ்வாய் தனது ஆட்சி,உச்சம்,நட்பு,பகை,நீச்சம் ஆகிய வீடுகளில் இருந்தாலோ, பார்த்
-தாலோ தோஷம் இல்லை என்பதாகும்.
இதிலிருந்து நான் சற்று மாறுபடுகிறேன்.
ஆசான் உயர்திரு ஆதித்தியகுருஜீயின்
கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன்
எப்படி என்றால் ஸ்தானபலம் பெற்ற செவ்வாயின் பார்வையும்,ஸ்தானபலம் பெறாத செவ்வாயின் பார்வையும் ஒன்று
போல் இருப்பதில்லை.

    எடுத்துக்காட்டாக மிதுனத்தில் செவ்வாய் பகை,பகை வீட்டில் இருக்கும் செவ்வாயின் பார்வை படும் இடங்கள் முழுமையாக பாதிப்படைவதில்லை எப்படி, நாம் நமக்கு ஆகாதவர்களின் வீட்டில் இருக்கம்போது நமது நிலை எப்படியோ அப்படித்தான் செவ்வாயினுடைய நிலையும்,இதே ஆட்சி,உச்சம்,நட்பு போன்ற இடங்களில் செவ்வாய் இருக்கும் போது அதன் பார்வையின் தன்மை கடுமையாக இருக்கும்.ஆகவே செவ்வாய் தோஷ நிர்ணயம் செய்யும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும்

    செவ்வாய்தோஷம் என்றால் என்ன? என்பதற்கு விடை தேடும் போது அதனுடை
ய காரகத்துவம் நமக்கு நினைவுக்கு வரவேண்டும் செவ்வாய் தைரிய வீரிய காரகன் முரட்டு குணங்கள்,முன்பின் யோசிக்காமை கலகம் செய்வது போன்றவையாகும்.

    இனி செவ்வாயானவர் எந்தெந்த இடங்களில் இருந்தால் என்ன மாதிரியான வேலைகளை செய்வார் என்பதனை அடுத்த பதிவில் பார்க்கலாம்.....(தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சந்திரனின் நீச நிலை

பீஜம் ஷேத்திரம் 2

திருமணப் பொருத்தம் 4