திருமணப் பொருத்தம் 8

திருமணப்பொருத்தம் 8
     -----------------------
   இப்போது செவ்வாய் தோசத்தைப் பற்றி
பார்ப்போம்.

   செவ்வாய் தோசம் லக்கினம் ராசி சுக்கிரன் இந்த மூன்றுக்குமாகத்தான் பார்க்க வேண்டும்

   இந்த மூன்று அமைப்புகளிலும் 1,2,4,7,8,
12 ஆகிய இடங்களில் இருந்தால் அதை செவ்வாய் தோசமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.இதில் 1 ம் இடத்தை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம் என்னவென்றால் லக்கனம் உயிர் மற்றும் குணத்தை பிரதிபலிக்கும்,சந்திரன் உடல் மற்றும் மனதை குறிக்கும்,சுக்கிரன் சுக்கிலம் மற்றும் உடல் உறவு சுகத்தையும்  அதனால் ஏற்படும் புத்திர பாக்கியம் பற்றி குறிப்பிடுவதாகும்.செவ்வாய் இந்த அமைப்புகளுடன் சம்பந்தப்படும் போது குணக்கேடுகளையும் மனைவி அல்லாத பிற பெண்களின் தொடர்புகளையும்-கணவன் அல்லாத பிற ஆண்களின் தொடர்புகளையும் ஏற்படுத்தும்.உடல
அளவில் தவறான உறவுகள் ஏற்படும் என்பதால் தான் இந்த மூன்றின் அடிப்படையில் செவ்வாய் இருந்தால் தோசமாக எடுத்துக்கொள்ள வேண்டும்

   செவ்வாய் தோச விதிவிலக்குகளாக மேற்படி அமைப்பில் தோசம் ஏற்படுத்தி உள்ள செவ்வாய் தன் ஆட்சி,உச்ச, நீச்ச வீடுகளில் இருந்தால் தோசம் இல்லை

     சிம்ம லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோசம் இல்லை.மேலும் செவ்வாயானவர் சிம்மத்தில் இருந்து அது லக்கினம் சந்திரன் சுக்கிரன் இவைகளுக்கு 1,2,4,7,
8,12 ஆமிடங்களாக வந்தால் தோசம் இல்லை.

   தன்னுடைய நட்பு வீடுகளான கடகம் தனுசு மீனம் சிம்மம் ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்து அது லக்கினம் சந்திரன் சுக்கிரனுக்கு 1,2,4,7,8,12 ஆகிய இடங்களாக வருமானால் தோசம் இல்லை.

   செவ்வாய் சூரியன்,குரு,சனி,ராகு,கேது ஆகிய கிரகங்களுடன் சேர்ந்தோ அல்லது இவர்களால் பார்க்கப்பட்டோ இருந்தால் தோசம் இல்லை

       தோசம் தரும் அமைப்புகளில் செவ்வாய் இருந்து பரிவர்த்தனை ஆகி இருந்தால் தோசம் இல்லை

   இது வரையிலும் செவ்வாயால் தோசம் ஏற்படும் நிலையும்,விதிவிலக்குகள் நிலையும் பார்த்தோம்.செவ்வாய்தோசம் ஏற்பட்டிருந்தால் அதற்கு இணையான அதே அளவுள்ள தோச ஜாதகங்களை இணைக்க வேண்டும்.

   எந்த விதிவிலக்கிலும் வராத தோசத்திற்கு அதே மாதிரி ஜாதகத்தையும் விதி விலக்கு பெற்ற ஜாதகத்திற்கு விதிவிலக்கு பெற்ற ஜாதகத்தையும் இணைக்க வேண்டும்..... (தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சந்திரனின் நீச நிலை

பீஜம் ஷேத்திரம் 2

திருமணப் பொருத்தம் 4