பஞ்சமஹா புருஷயோகம்

பஞ்ச மஹா புருஷ யோகங்கள் சொல்லும் கேந்திர  வலிமை*

குஜாதி பஞ்ச கிரகங்களால் ஏற்படும் யோகங்களுள் முதன்மையாக சொல்லப்படும் யோகங்கள் ஐந்து*

ருச்ச யோகம் / ஹம்ச யோகம் / பத்ர யோகம் / மாளவ்யா யோகம் /ஸச யோகம்*

ருச்ச = செவ்வாய் / ஹம்ச = குரு / மாளவ்ய =சுக்ரன் / பத்ர = புதன் / ஸச = சனி*

இந்த கிரகங்கள் நமது ஜென்ம லக்னத்திற்கோ அல்லது ராசிக்கோ 1/4/7/10 என்ற இடங்களில் ஆட்சி /உச்சம் பெற்று அமைந்தால் இவற்றால் சொல்லப்படும் யோகத்தின் பலன்கள் நமக்கு கிடைக்கும்*

வட மொழியில் கேந்திர என்றால் மையம் என்று பொருள்*

மலையாளத்தில் மத்திய அரசை குறிப்பிடும் போது கேந்திர சர்க்கார் என்று தான் குறிப்பிடுவார்கள்*

ஒரு நாட்டை குறிப்பிட்டு சொல்லும் போது  அந்த நாட்டை ஆளும் மைய அரசு என்ற மத்திய அரசே உலக அளவில் முதன்மை ஆளுமை அதிகாரத்தைப் பெறுகிறது*

இது போலவே ஒரு ஜாதகத்திலும் கிரகங்களின் தனித்த யோகத்தை குறிப்பிடும் போது அவை ஜாதக மையம் என்ற (1-4-7-10) கேந்திர ஸ்தானங்களில் அமர வேண்டும் என்று வலிமையாக சொல்லப்படுகிறது*

எனவே ஒரு மனிதர் மத்திய அரசில் நேரடியாக அல்லது மறைமுகமாக செல்வாக்குப் பெற வேண்டும் என்றால் அவர் ஜாதகத்தில் லக்னம் / இராசிக்கு கேந்திரத்தில் இந்த 5 கிரகங்களில் ஒன்று ஆட்சி உச்சம் பெறவேண்டும் என்று சொல்லலாம்*

அல்லது காலபுருஷ லக்னத்திற்கு கேந்திர ஸ்தானம் என்ற மேஷம் கடகம் துலாம் மகரம் இவற்றில் ஆட்சி உச்சம் பெறும் கிரகங்கள் அங்கே இடம் பெற வேண்டும் என்று சொல்லலாம்*

கர்ம காரகன் சனி அல்லது லக்னத்திற்கு 10 மிடம் என்ற கர்ம ஸ்தானத்தின் அதிபதியான கிரகம் இந்த  கேந்திர ராசிகளில் நின்றாலும் இதன் பலன் பகுதியளவு கிடைக்கும் என்று சொல்லலாம்*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சந்திரனின் நீச நிலை

பீஜம் ஷேத்திரம் 2

திருமணப் பொருத்தம் 4