தோஷசாம்யம்


‍‍

‍‍‍
‍‍

‍‍
‍‍தோஷ சாம்யம்
--------------------------

பொதுவாக திருமண பொருத்தம் காணும் போது நக்‌ஷத்திர பொருத்தத்துடன் தோஷ சாம்யம் பார்ப்பது மிகவும் முக்கியமானது ஆகும். இதனை  சில ஜோதிஷிகள்  உதாசீனப்படுத்துவதினால் திருமணவாழ்க்கையில் பல சங்கடங்களை ஜாதகர்கள்  அனுபவிக்கநேரிடுகிறது. தோஷசாம்யத்தினை அனைவரும் அறிந்துகொண்டு பயன்படுத்த வேண்டுமென்பதே அடியேனின் அவா ஆகும்.
‍‍
‍‍

தோஷ சாம்யத்தில் 5 விதமான முறைகள் உள்ளது என்பதாக அடியேன் அறிகிறேன்‌.
‍‍
‍‍

அவைகள்.
‍‍

1. பாவ குண  எண்கொண்டு தோஷசாம்யம் கண்டறிதல்.
‍‍

2. கிரஹ குண எண்கொண்டு தோஷசாம்யம் கண்டறிதல்.
‍‍

3. பாவ குண எண்கொண்டும் கிரஹ குண எண்கொண்டும் தோஷசாம்யம் கண்டறிதல்.
‍‍

4.கிரஹ குண எண்கொண்டும், கிரஹ பல குண எண்கொண்டும் தோஷசாம்யம் கண்டறிதல்.
‍‍

5.பாவ குண எண், கிரஹ குண எண், கிரஹ பல குண எண்கொண்டு தோஷசாம்யம் கண்டறிதல்.
‍‍
‍‍

அடியேனை பொறுத்தவரை 5 வது முறையான பாவ குண எண், கிரஹ குண எண், கிரஹ பல குண எண்கொண்டு தோஷசாம்யம் கண்டறிதலே சிறந்ததாகும்.
‍‍
‍‍

இதன்படி ஒரு ஜாதகத்தில் 1,2,4,7,8,12 பாவத்தில் சூரியன், சனி, ராகு, கேது, செவ்வாய்  இருந்தால் இவை தோஷத்தினை தருகிறது.
‍‍
‍‍

ஏன் இந்தகிரஹம் மட்டும் தோஷம் தருகிறது??
‍‍
‍‍

ஏன் இந்த பாவம் மட்டும் தோஷம் தருகிறது??
‍‍
‍‍

கிரஹங்களை பொருத்தவரையில் சூரியன், சனி, ராகு, கேது, செவ்வாய் இவ்வைந்தும் குரூர கிரஹங்கள் ஆவர். ஆதலாம் இக்கிரஹங்களுக்கு மட்டும் தோஷம் உண்டு.  குரு, சுக்கிரன், சந்திரன், புதன் செளம்ய கிரஹங்கள் ஆனதால் தோஷம் கிடையாது.
‍‍
‍‍

ஏன் 1,2,4,7,8,12 ம் பாவங்கள் மட்டும் கெடுதல் செய்கிறது.
‍‍
‍‍

நாம் ஜோதிஷ அடிப்படையிலிருந்தே இதற்கு பதில் பெறவேண்டியுள்ளது. அதன்படி க்ரூர கிரஹங்கள் ஆனது உபஜய பாவமான 3,6,10,11ல் இருந்தால் தீமை தருவதில்லை. ஆதலால் இப்பாவங்களை விலக்கிவிடலாம். மேலும் எந்த கிரஹமும் 5,9ம் இடமான த்ரிகோணத்தில் இருந்தாலும் தீமை தருவதில்லை. ஆதலால் இப்பாவங்களையும் விலக்கி விடலாம். மீதி கிடைப்பது 1,2,4,7,8,12 பாவங்கள் மட்டுமே. ஆதலால் தான் இப்பாவங்களை மட்டும் செவ்வாய் தோஷம், தோஷ சாம்யம் போன்றவற்றிற்கு எடுத்துக்கொள்கிறோம்.
‍‍
‍‍

தோஷ சாம்யத்தினை எவ்வாறு கணக்கிடுவது??
‍‍
‍‍

இதற்கு லக்கினத்திலிருந்து
‍‍

1,2,4,7,8,12ம் பாவத்தில் ஏதேனும் கிரஹம் இருக்கிறதா எனமுதலில் காண வேண்டும்‌.
‍‍
‍‍

அக்கிரஹங்களானது க்ரூர கிரஹங்களான சூரியன், சனி, ராகு, கேது, செவ்வாய்  ஆக இருந்தால், அக்கிரஹம் உட்சம், ஆட்சி, நட்பு, பகையில் எந்த பலத்தில் உள்ளது என காணவேண்டும்.
‍‍
‍‍

பின் அதற்குரிய குண எண்களை கொண்டு ஒன்றாக பெருக்கவேண்டும்.
‍‍
‍‍

பாவ குண எண்
‍‍

2, 4,12 ம் பாவங்கள்– 1,
‍‍

1, 7,  8 ம் பாவங்கள்– 4
‍‍
‍‍

கிரஹ குண எண்
‍‍

சூரியன் – 1

‍‍
சனி, ராகு, கேது –2
‍‍

செவ்வாய் – 3
‍‍
‍‍

கிரஹ பல குண எண்.
‍‍

ஆட்சி, உட்சம் – 1,
‍‍

நட்பு, சமம்– 2,
‍‍

பகை – 3,
‍‍

நீட்சம் – 4.
‍‍
‍‍

உ.ம்.

மேஷ லக்கினம் என எடுத்துக்கொள்வோம்.
‍‍

2ம் பாவத்தில் சூரியன், சனி, ராகு, செவ்வாய் இருக்கிறது என எடுத்துக்கொண்டால்
‍‍
‍‍

சூரியன் - பகை,
‍‍

சனி- நட்பு,
‍‍

ராகு- நீட்சம்,
‍‍

செவ்வாய் - சமம்.
‍‍
‍‍

குண எண் காண
‍‍

2ம் பாவத்தின் குண எண் 1
‍‍
‍‍

கிரஹ குண எண் காண
‍‍

சூரியன் – 1
‍‍

சனி, ராகு –2
‍‍

செவ்வாய் – 3
‍‍
‍‍

கிரஹ பல குண எண் காண
‍‍

சூரியன் - பகை -குண எண் 3,
‍‍

சனி- நட்பு- குண எண் 2,
‍‍

ராகு- நீட்சம்- குண எண் 4,
‍‍

செவ்வாய் - சமம்- குண எண் 2
‍‍
‍‍

மூன்றினையும் பெருக்க
‍‍

சூரிய தோஷம் 1x1x3 = 3
‍‍

சனி தோஷம் 1x2x2=4
‍‍

ராகு தோஷம் 1x 2x 4=8
‍‍

செவ்வாய் தோஷம் 1x3x2 =6
‍‍

இவைகளை கூட்ட 3+4+8+6=21
‍‍
‍‍

ஆக 21 என்பது தோஷத்தின் அளவு ஆகும்.
‍‍
‍‍

இவ்வாறு பார்ப்பது ஆரம்பத்தில் சிலருக்கு கடினமாக இருக்கும். பழகிகொண்டால் மிகவும் சுலபம். ஐந்து கிரஹத்திற்குதான் தோஷ சாம்யம் பார்க்கபோகிறோம்.
‍‍
‍‍

சிலர் கிரஹ குண எண், கிரஹ பல குண எண் மட்டும் கொண்டு தோஷம் அறிந்து பின் 1,7,8ல் கிரஹங்கள் இருந்தால் மட்டும் அதனை 4 மடங்கு ஆக்கிகொள்வர்.
‍‍
‍‍

குரு, சுக்கிரன், புதன் க்ரூர கிரஹங்களை சேர்ந்தாலும், பார்த்தாலும் அக்குறிப்பிட்ட கிரஹத்தின் தோஷத்தினை மட்டும் பாதியாக குறைத்துக்கொள்ளவேண்டும்.
‍‍
‍‍

உ.ம் ஆக இந்த நாலு கிரஹங்களையும் குரு பார்த்திருந்தால் தோஷத்தின் அளவு 10.5 ஆகும்.
‍‍
‍‍

தோஷ சாம்யம்.
‍‍

தோஷத்தின் அளவு ஆண், பெண் இருவருக்கும் கண்டறிந்த பின்னர்
அது சாம்யம் ஆகிறதா என கண்டறிய வேண்டும்.
‍‍
‍‍

பெண் ஜாதகத்தின் தோஷ அளவானது ஆண் ஜாதகத்தின் தோஷ அளவினை விட குறைவாக இருந்தாலும், சமமாக இருந்தாலும் திருமணம் செய்யலாம்.
‍‍
‍‍

பெண் ஜாதகத்தின் தோஷ அளவானது ஆண் ஜாதகத்தின் தோஷ அளவினை விட அதிகமாக இருந்தால் திருமணம் செய்யக்கூடாது. .
‍‍‍‍‍‍

‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சந்திரனின் நீச நிலை

பீஜம் ஷேத்திரம் 2

திருமணப் பொருத்தம் 4