குருவின் கோச்சார நிலை 1
குருவின் கோச்சார நிலை
_____________________________
இயற்கை சுபகிரகங்களில்
ஒருவரான குருபகவான் இன்று ஆவணி
17(02-09-2017) சனிக்கிழமை காலை மணி 09:34க்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் இதைப்பற்றி முக நூலில் நமது ஜோதிடரகள் வித,விதமான பலன்களையும் பதிவிட்டு விட்டனர் இருந்தாலும் குருப்பெயர்ச்சி பலன் இன்னும் முழுதாக கனித்து பதிய வில்லையோ என்ற என்னம் எனக்கு உள்ளது,அதைப்பற்றி விளக்குவதே இந்த பதிவின் நோக்கமாகும்
கோச்சாரத்தில் குருபகவான் ஒரு ராசிக்கு 2,5,7,9,11 ஆம் இடங்களில் இருந்தால் நல்ல பலன்களையும்,1,3,4,6,8,10,12ஆகிய ராசிகளில் இருந்தால் நற்பலன்களை தரமாட்டார் என்பது பொது விதி இதன் அடிப்படையிலேயே பெரும்பாலான குரு பெயர்ச்சி பலன்கள் சொல்லப்படுகிறது இந்த பலன்களை படித்துவிட்டு அதிகப்படியான சந்தோசமோ கவலையோ படவேண்டியதில்லை
எந்த கிரகமாக இருந்தாலும் எந்த ஒரு ஜாதகர்க்கும் அதிகப்படியான நன்மைகளையோ,தீமைகளையோ தருவதில்லை.மேலும் திசா புத்தியிலோ கோச்சாரத்திலோ,ஒரு கிரகம் தன்னுடைய ஆதிபத்தியம்,காரகம்
ஸ்தானபலம்,சாரபலம் இவற்றை மீறி பலன் தருவதில்லை அது சுபக்கிரகமாக
இருந்தாலும் பாவகிரகமாக இருந்தாலும் சரி.இந்த நிலைகளைக் கனிக்காமல் எழுதும் பலன்கள் பெரும்பாலும் பொய்த்து போவதற்கு வாய்ப்புகள் அதிகம். இனி உதாரண ராசியை வைத்து குருவின் கோச்சார பலனை பார்க்கலாம்
முதலில் நன்மை தரும் இடமான இரண்டாம் பாவத்தை எடுத்துக் கொள்வோம். குரு இன்று துலாம் ராசியில் உள்ளளார்.நாம் உதாரணமாக கன்னி ராசியை எடுத்துக்கொள்வோம். கன்னி ராசிக்கு இரண்டில் குரு நன்மை செய்வாரா?தீமைசெய்வாரா?பொதுவில் இரண்டில் குரு நன்மை செய்வார் என்று நினைக்கலாம் ஆனால் அதுதான் இல்லை.
கன்னி உபய ராசி ,உபயராசிக்கு ஏழாம் அதிபதி பாதகாதிபதி,குருவின் ஆதிபத்தியம் 4,7 ஆம் இடங்கள், இந்த பாதகாதிபதி இரண்டாம் இடத்தில் இருந்து தனது 5,7,9 பார்வைகளால் கன்னி ராசிக்கு,6,8,10ஆம் இடங்களை பார்ப்பார்,ஒவ்வொரு நிலையாக செல்லும்போது கொஞ்சம் எளிமையாக இருக்கும் ஆகவே முதலில் இரண்டாம் இடத்தில் உள்ள குருவைப் பற்றி மட்டும் சிந்திப்போம்.
இரண்டாம் இடம் தனஸ்தானம்,குரு தன காரகன், காரகன் காரகத்தில் இருந்தால்
"காரகோ பாவநாஸ்த்தி" பாதகாதிபதி இரண்டில் உள்ள போது இரண்டாம் பாவ காரகங்கள் முற்றிலும் கெடும்.இதில் குருவின் ஸ்தான பலத்தை பார்த்தோமானால் துலாம் குருவின் பகை வீடு வலிமை குறைவு என்று எடுத்துக் கொள்ளக்கூடாது,குருவின் சார பலத்தையும் பார்க்க வேண்டும். துலாம் ராசியில் முதலில் இருக்கும் நட்சத்திரம் கன்னி ராசியின் பகைவரான,குருவின் நண்பரான செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை3 மற்றும் சித்திரை4,சித்திரை3 ல் தற்போது குரு இருக்கும் நிலையில் அம்சத்திலும் குரு துலாத்தில் இருப்பார்.இப்படி வர்க்கோத்தமம் பெரும் நிலையில் அங்கே குரு வலிமை என்று எடுத்துக்கொள்ளலாம். சித்திரை4 ஆம் பாதத்திற்கு வரும் போது விருச்சிகத்தில் நட்பு நிலை பெருவார். இதனால் இந்த பாத சாரங்களில் குரு பயணம் செய்யும் காலங்களில் கன்னி ராசிக்காரர்களின் பொருளாதார நிலை சொல்லிக் கொள்ளும் படியாக இருக்காது.மீதியை அடுத்த பதிவில் நாளை பார்க்கலாம்
-நன்றி-
கருத்துகள்
கருத்துரையிடுக