குருவின் கோச்சார நிலை 2

குருவின் கோச்சார நிலை 2
______________________________

     இனி ராகுவின் நட்சரத்தில் குரு சஞ்சாரம் செய்யும்போது குருவின் வலிமை என்ன என்பதை பார்போம்
  
       சுவாதி நட்சத்திரம் குருவின் பகைவரான ராகுவின் நட்சத்திரம் ஆக, இங்கு குருவிற்கு சார பலம் இல்லை ஒன்றாம் பாதத்தில் குருவின் பயணம் இருக்கும்போது, சாரபலம் இல்லாவிட்டாலும் அம்சத்தில் தனுசுவில் ஆட்சி மற்றும் மூலத்திரிகோண வலிமையைப் பெறுவார்,சுவாதி இரண்டில் மகரத்தில் நீச வலிமையை பெருவார்,சாரபலமும் இல்லாமல் அம்சத்தில் நீசம் பெரும் போது அங்கே குரு தன் வலிமையை முற்றிலுமாக இழக்கிறார்.சுவாதி மூன்றில் சம வலிமையைப் பெருவார்,சுவாதி நான்கில் ஆட்சி வலிமை பெருவார்
        அடுத்து குருவின் விசாக நட்சத்திரத்தில் பயணம் செய்யும்போது,சுய சார பலம் பெருவார்
விசாகம் ஒன்றில் இருக்கும் போது அம்சத்தில் தனது நண்பரான செவ்வாயின் வீடான மேசத்தில் நட்பு வலிமை பெருவார்.இரண்டு மற்றும் மூன்றில் வரும்போது தனது பகைவரான சுக்கிரன்,புதன் வீடுகளில் முறையே ரிசபம்,மிதுனத்தில் இருப்பார்.

        இதன் மூலமாக நாம் அறிந்து கொள்வது,குரு தான் இருக்கும் வீடான கன்னி ராசியின் தன ஸ்தானத்திற்கு நன்மையோ,தீமையோ செய்ய வேண்டும் என்றால் இந்த நிலைகளில் குரு வலிமை பெறவேண்டும். அதற்கு குருவின் ஆதிபத்தியங்களும் உதவி செய்ய வேண்டும்.
          
         இங்கு குருவின் ஆதிபத்தியம் நான்கு மற்றும் ஏழு.நான்காம் அதிபதி குரு இரண்டில் பலம் பெற்று இருக்கும் போது நான்காம் பாவ காரகங்கள் மூலமாகவும்,அப்போது தான் பயணம் செய்யும் நட்சத்திர அதிபதியின் காரகம் மூலமாகவும் தனம் வரும்.வலிமை இழக்கும் போது மேலே சொன்ன பலன்கள் நடக்காது.

            இனி ஏழாம் ஆதிபத்தியத்தை எடுத்துக்கொள்வோம்.ஏழும்,இரண்டும் சம்பந்தப்படும் போது கன்னி ராசிக்கார்ருக்கு ஏழாம் பாவ காரகத்தின் மூலம் தனம் வரவு இருக்கும்.மேலே சொன்ன நிலை இதற்கும் பொருந்தும்.இங்கு குருவின் பாதகாதி தன்மையும் குருவின் வலிமையைப் பொருத்து மாறுபடும்.இதன் மூலம் நாம்
தெரிந்து கொள்வது,அந்த நேரத்தில் குரு சம்பந்தப்படும் பாவங்களின் மூலமாக
என்ன கிடைக்கும்,கிடைக்காது,என்ன நடக்கும் நடக்காது என்பதாகத்தான் இருக்குமே அல்லாது,குரு நல்ல இடத்தில் இருந்தால் எல்லாமே நல்ல படியாக நடக்கும் என்று சந்தோசப்பட தேவை இல்லை அதே நேரம் கவலைப்படவும் தேவை இல்லை. இங்கே குருவின் பலம்
சித்திரை3,4 சுவாதி1,2 விசாகம்1 ஆகிய நட்சத்திரங்களில் பயணம் செய்யும்போது நல்லபடியாகவும் சுவாதி3 விசாகம்2 3 ல் சுமாராகவும் சுவாதி2 ல் பலமே இல்லை என்ற நிலையையும் பெருகிறார்

        இந்த நட்சத்திர பாதங்களில் குரு பயணம் செய்யும் போது குருவின் பலன்கள் அதற்கு தகுந்தாற்போல் இருக்கும்.

       நாளைய பதிவில் கன்னி ராசிக்கு இரண்டில் நிற்கும் குருவின் பார்வை படும் 6,8,10ஆம் இடங்களைப் பற்றியும்,குருவின் பார்வை என்ன செய்யும் என்பதைப் பற்றியும் பார்க்கலாம்
                      நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சந்திரனின் நீச நிலை

பீஜம் ஷேத்திரம் 2

திருமணப் பொருத்தம் 4